உயில் என்றால் என்ன? | what is will ? How to write a will?

உயில் என்றால் என்ன?
ஒரு நபர் உயிரோடு இருக்கும் போது, தனக்கு பிடித்தவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் சொத்துகளை எழுதிவைப்பதற்கு பெயரே உயில்.   இதனை மரண சாசனம் எனவும் அழைக்கலாம். எழுதி வைத்தவர் இறந்த பிறகு உயில் நடைமுறை க்கு வரும்.

யார் யாருக்கு உயில் எழுதலாம்?

ஒரு நபர் தன் சொத்துக்களை தனக்கு பிடித்தமான யாருக்கு வேண்டுமானாலும் உயில் எழுதலாம். தனது வாரிசுகளுக்கோ, நண்பர்களுக்கோ, தனக்கு பிரியமானவர்களுக்கோ, ஏதேனும் தொண்டு நிறுவனங்களுக்கோ, கோவில்களுக்கோ எதற்கு வேண்டுமானலும் உயில் எழுதலாம்.

சுயசம்பாத்தியம் – பூர்வீக சொத்து எதற்கு உயில் எழுதலாம்?

பூர்வீக சொத்தோ அல்லது சுயசம்பாத்தியத்தில் வாங்கிய சொத்தோ எதுவாக இருப்பினும் உயில் எழுதலாம். அந்த சொத்துக்கு உங்களது பெயரில் பட்டாவும், பத்திரமும் இருப்பது அவசியம்.

செல்லுபடியாத உயில் என்றால் என்ன?

ஒரு நபர் தன் சொத்துக்களை தனது வாரிசுக்கு உயில் எழுதி வைக்கிறார். அந்த உயிலின் பயனாளி அதாவது அந்த வாரிசு உயில் எழுதிவைத்தவருக்கு முன்பே இறந்துவிட்டால் அது செல்லுபடியாகாத உயில்.  இந்த உயிலைப் பொருத்து இறந்தவரின் வாரிசுகளுக்கு சொத்து சென்றடையாது.

உயிலில் பெண்களுக்குரிய சொத்துரிமை?

1989 ன் சட்டப்படி பெண்களுக்கு சொத்துரிமை உண்டு. சொத்தைப் பொறுத்தபட்டும் ஆண்களுக்கு எப்படி சரி பங்கோ அதே போல் பெண்களுக்கும் சரி பங்கு தரவேண்டும். ஆனால் உயிலை பொறுத்தமட்டும்  அந்த சொத்து யாரு பெயருக்கு உயில் எழுதப்பட்டதோ அது அவரையே சாரும். வேறு யாரும் அதில் உரிமை கோரமுடியாது.

உயிலுக்குரிய முக்கிய அம்சங்கள்

  1. உயில் உங்கள் மொழியிலேயே எழுதலாம்.
  2. பதிவு செய்தும் செய்யாமலும் வைத்துக்கொள்ளலாம்.
  3. ஒரு நபர் தன் வாழ்நாளில் எத்தனை உயில் வேண்டுமானலும் எழுதலாம். கடைசியாக எழுதிய உயிலே செல்லுபடியாகும். உயில் எழுதிய தேதியை பொறுத்து கடைசி உயில் கணக்கிடப்படுகிறது.
  4. சொத்துக்கள் சார்ந்த பிரச்சனைகளுக்கு சிவில் கோர்ட்டை நாடவேண்டும். சிவில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞரை நாட வேண்டும்.
  5. உயிலை செல்லுபடியாக்கும் போது உயில் எழுதியவர் உயிருடன் இருக்க முடியாது. நிலைமை இப்படியிருக்க உயில் எழுதும் போது மிகவும் கவனமாக, குறிப்பாக தெளிவாக யார் யாருக்கு எப்படி? ஏன்? போன்ற கேள்விகளுக்குகெல்லாம் விடை இருப்பது மாதி அமையவேண்டும்.
Posted in Blog.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *