Rectification Deed

உங்கள் சொத்து பத்திரத்தில் பிழையா? பிழைத்திருத்தல் செய்வது எப்படி ?

உங்கள் சொத்து பத்திரத்தில் பிழையா? பிழைத்திருத்தல் செய்வது எப்படி ?

ஒரு பத்திரத்தில் உள்ள எழுத்து பிழையை அல்லது உரிமையை மாற்றக் கூடிய பிழையை சரிசெய்ய நாம்  எழுதுவது பிழைத்திருத்தல் பத்திரம்.

பிழைத்திருத்தல் பத்திரம் வகைகள்

  1. சாதரண பிழைத்திருத்தல் பத்திரம்
  2. உரிமைகள் மாறக்கூடிய பிழை திருத்தல் பத்திரம்

சாதரண பிழைத்திருத்தல் பத்திரம் :

  1. ஒருவரின் பெயரில் எழுத்து பிழை
  2. இனிஷியலை தவறாக எழுதுவது
  3. தந்தை பெயரை தவறாக எழுதுவது
  4. கதவு எண்ணை தவறாக எழுதுவது.
  5. ஊர் பெயரில் பிழை
  6. செக்கு பந்தியில் பிழை
  7. பட்டா எண்ணை பத்திரத்தில் தவறாக எழுதுதல்
  8. முன்புள்ள பத்திரங்களின் எண்களை தவறாக எழுதுவது.
  9. அளவுகள் மாறுதல் (40*60 பதிலாக 60*40 என எழுதுதல்)

உரிமைகள் மாறக்கூடிய பிழை திருத்தல்  பத்திரம்

1.பத்திரத்தில் சொத்தின் அளவை தவறாக குறிப்பிடுதல்.  - உதாரணமாக 4 ஏக்கர் 2 சென்ட் என்பதற்கு பதிலாக 2 ஏக்கர் 4 சென்ட் என குறிப்பிடுதல்.

  1. சர்வே எண்னை தவறாக எழுதுதல்
  2. எல்லைகள் தவறாக எழுதுவது
  3. அளவுகள் மாறுதல் (40*60 பதிலாக 40*80 என எழுதுதல்)

இந்த தவறுகளுக்கு பிழைதிருத்தல் பத்திரம் எழுதி பதிவு செய்து சர்செய்து கொள்ளமுடியும்.

 

Posted in Blog.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *