
தமிழ்நாடு பதிவுத்துறையின் முத்திரை தீர்வை மற்றும் பத்திர பதிவு கட்டண விவரங்கள்
ஓரு பத்திரத்தினை பதிவு செய்யும் பொழுது ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக பதிவு துறைக்கு செலுத்த வேண்டும் . இந்த கட்டணம் பத்திரத்தின் தன்மையைப் பொருத்து மாறுபடும்.
பத்திரத்தின் தன்மையும் கட்டணவிவரங்களும் :
ஆவணம் | முத்திரைத்தீர்வை | பதிவுக் கட்டணம் |
1. தான ஆவணம் | 7% சந்தை மதிப்பிற்கு | 4% சந்தை மதிப்பிற்கு |
2. பரிவர்த்தனை | அதிகபட்ச சொத்து மதிப்பிற்கு 7% | அதிகபட்ச சொத்து மதிப்பிற்கு 4% |
3. விற்பனை ஆவணம்/கிரைய ஆவணம்(விற்பனை/கிரையம்) | 7% சந்தை மதிப்பிற்கு
|
4% சந்தை மதிப்பிற்கு |
4. விக்கிரைய உடன்படிக்கை | Rs.20 | 1% (முன்பணத்திற்கு) சுவாதீனத்துடன் கூடிய விக்கிரைய உடன்படிக்கை எனில் கைமாற்றுத் தொகைக்கு 1% |
5.கட்டிட ஒப்பந்த உடன்படிக்கை | 1% ஒப்பந்த தொகைக்கு அல்லது ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள தொகை இவற்றில் அதிகமாக உள்ள தொகைக்கு | 1% ஒப்பந்த தொகைக்கு அல்லது ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள தொகை இவற்றில் அதிகமாக உள்ள தொகைக்கு |
6 ரத்து ஆவணம் | Rs.50 | Rs.50 |
7. உரிமை ஆவணங்களின் ஒப்படைப்பு | 0.5% கடன் தொகைக்கு அதிகபட்சம் ரூ.30,000/- | 1% கடன் தொகைக்கு அதிகபட்சம் ரூ.6,000/ |
அடமானம்
ஈடு அடமானம் | 1% (கடன் தொகைக்கு) உயர்ந்தபட்சம் Rs40,000/- | 1% (கடன் தொகைக்கு) உயர்ந்தபட்சம் Rs10,000/- |
ஈடு அடமானம் (சுவாதீனத்துடன் கூடியது | 4% (கடன் தொகைக்கு) | 1% (கடன் தொகைக்கு) உயர்ந்தபட்சம் Rs.2,00,000/- |
பாகப்பிரிவினை ஆவணம்
i) குடும்ப நபருகளுக் கிடையில் | ஒவ்வொரு பாகத்திற்கும் சந்தை மதிப்பிற்கு 1% (அதிகபட்சம் ரூ.25,000/-) | ஒவ்வொரு பாகத்திற்கும் சந்தை மதிப்பிற்கு 1% (அதிகபட்சம் ரூ.4,000/-) |
ii) குடும்ப அல்லாதவர்களுக்கிடையில் | பிரிந்த பாகத்தின் சந்தை மதிப்பிற்கு 4% | பிரிந்த பாகத்தின் சந்தை மதிப்பிற்கு 1% |
பொது அதிகார ஆவணம்
பொது அதிகாரம் விற்பனை செய்வதற்கு (குடும்ப நபர் அல்லாதவருக்கு) | Rs. 100 | Rs.10,000 |
பொது அதிகாரம் விற்பனை செய்வதற்கு (குடும்ப நபருக்கு) | Rs. 100 | Rs.1,000 |
பொது அதிகாரம் விற்பனை தவிர இதர காரியங்களுக்கு | Rs. 100 | Rs.50 |
பொது அதிகாரம் (கைமாற்று தொகையுடன்) | 4% கைமாற்றுத் தொகைக்கு | கைமாற்று தொகைக்கு 1% அல்லது ரூ.10,000/- இதில் எது அதிகமோ அத்தொகை வசூலிக்கப்பட வேண்டும் |
தான செட்டில்மெண்ட்
தான செட்டில்மெண்ட்
குடும்ப நபருக்கு |
சந்தை மதிப்பிற்கு 1% (அதிகபட்சம் ரூ.25,000/-) | சந்தை மதிப்பிற்கு 1% (அதிகபட்சம் ரூ.4,000/-) |
குடும்ப நபர் அல்லாதவருக்கு | 7% சந்தை மதிப்பிற்கு | 4% சந்தை மதிப்பிற்கு |
கூட்டு வணிகம்
மூலதனம் Rs.500க்குள் | Rs. 50 | 1% மூலதன தொகைக்கு |
மூலதனம் Rs.500க்கு மேல் | Rs. 300 | 1% மூலதன தொகைக்கு |
விடுதலை பத்திரம்
குடும்ப நபர்களுக் கிடையில் | சந்தை மதிப்பிற்கு 1% (அதிகபட்சம் ரூ.25,000/-) | சந்தை மதிப்பிற்கு 1% (அதிகபட்சம் ரூ.4,000/-) |
குடும்ப நபர் அல்லாவர்களுக் கிடையில் | 7% சந்தை மதிப்பிற்கு | 1% சந்தை மதிப்பிற்கு |
குத்தகை
30 வருடத்திற்குள் | 1% கூடுதல் குத்தகை தொகைக்கு | 1 % குத்தகை தொகைக்கு அதிகபட்சம் Rs.20000/- |
99 வருடத்திற்குள் | 4 % கூடுதல் குத்தகை தொகைக்கு | 1 % குத்தகை தொகைக்கு அதிகபட்சம் Rs.20000/- |
99 வருடத்திற்கு மேல் | 7 % கூடுதல் குத்தகை தொகைக்கு | 1 % குத்தகை தொகைக்கு அதிகபட்சம் Rs.20000/- |