Transfer of property through unregistered will

பதிவு செய்யப்படாத உயிலை நடைமுறைப்படுத்துவது எப்படி?

உயில்  எழுதியவர் இறந்த பின் உயிலை பதிவு செய்ய முடியுமா?

பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யாமல் உயிலை எழுதிவைத்தவர் இறந்துவிட்ட பிறகு அதை நடைமுறைப்படுத்த உயில் யாருக்கு எழுதிள்ளாரோ அந்த நபர், அந்த உயிலில் பிரதியை எடுத்துக்கொண்டு சார் பதிவாளர் அலுவலகம் சென்று மனு செய்ய வேண்டும். இந்த மனுவில் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு உயிலை பதிவு செய்து தருவார்,

இதற்கு உயில் எழுதியவரின் இறப்பு சான்று. அத்துடன் உங்களுக்கு தான் உயில் எழுதிவைத்துள்ளார் என்பதற்கான ஆதாரமான அரசு ஆவணங்களான் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு போன்ற முகவரி மற்றும் புகைப்படத்துடன்  சான்று எடுத்துக்கொண்டு செல்லவேண்டும்.

உயில் எழுதியதை எப்படி அறிந்து கொள்வது?

ஒரு நபர் ஒரு பதிவு செய்யாத உயிலை எழுதும் பொழுது அதை நிறைவேற்ற ஒரு நபரையோ அல்லது சிவில் சார்ந்த ஒரு வழக்கறிஞரையோ நாடுவது சிறந்தது.  பதிவு செய்த உயில் /பதிவு செய்யாத உயில் இரண்டுமே  வில்லங்க சான்றில் வராது. உயில் எழுதியவர் சொன்னாலன்றி உயில் எழுதப்பட்டது தெரிய வாய்ப்புகள் இல்லை.

உயில்  எழுதியவர் இறந்த பின் உயிலை பதிவு செய்ய காலகெடு உள்ளதா?

உயில்  எழுதியவர் இறந்த பின் உயிலை பதிவு செய்ய எந்த காலக்கெடுவும் இல்லை.  உயில் எழுதியவர் இறந்து 10 ஆண்டுகள் கழித்து அந்த உயில் கிடைக்கும் பட்சத்தில்  அந்த சொத்தில் எந்த வில்லங்கமும் இல்லை எனில் பயனாளி அதை பதிவு செய்து கொள்ள முடியும்.

Video Ref :சட்ட விளக்கம்

 

Posted in Blog.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *